| 245 |
: |
_ _ |a புருடோத்தமப்பெருமாள் கோவில் - |
| 246 |
: |
_ _ |a திருக்கரம்பனூர் |
| 520 |
: |
_ _ |a ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, புருடோத்தமர், உத்தமர் கோயில், திருச்சி, பிரம்மா கோயில், பிட்சாடனர், சரசுவதி கோயில், திவ்யதேசம், மங்களாசாசனம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
| 914 |
: |
_ _ |a 10.877244 |
| 915 |
: |
_ _ |a 78.703297 |
| 916 |
: |
_ _ |a புருடோத்தமன் |
| 917 |
: |
_ _ |a புருடோத்தமன் |
| 918 |
: |
_ _ |a பூர்ணவல்லி, பூர்வாதேவி |
| 922 |
: |
_ _ |a கதலீ (வாழை மரம்) |
| 923 |
: |
_ _ |a கதம்ப தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a கார்த்திகை தீபம், மாசி நீராட்டு, வைகுண்ட ஏகாதசி, கதம்ப தீர்த்தவாரி |
| 927 |
: |
_ _ |a திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார் பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. 1751 இல் ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரருக்கும் நடந்த போரில் கர்னல் ஜின்ஜன் என்பவன் திருச்சிராப்பள்ளிக் கோட்டையிலிருந்து பின்வாங்கி இந்த சோலையில் அடைக்கலம் புகுந்தான். ஆங்கிலப் படை வீரர்களோ, பிரஞ்சுபடை வீரர்களோ இக்கோவிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காதது மட்டுமன்றி நிலங்களையும் ஆபரணங்களையும் தானமாக கொடுத்தனர் என்று பிரஞ்சுக்காரர்களின் வரலாற்றுக் குறிப்புகள் பரக்கப் பேசுகின்றன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a புருடோத்தமன், புஜங்க சயனக் கோலம் கிழக்கு நோக்கி திருமுக மண்டலம். இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரமனுக்கு உள்ள கோயிலில் சரசுவதி தேவி எழுந்தருளியுள்ளாள். |
| 930 |
: |
_ _ |a பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது. பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார். பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது. தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. |
| 932 |
: |
_ _ |a இங்குள்ள ராஜகோபுரம், மற்றதிவ்ய தேசங்களைவிட மிகச் சிறியதாக இருந்தாலும், மிகவும் கலை நுணுக்கங்களுக்கும், பேரழகுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோயில் கருவறை உத்யோக விமானம் ஆகும். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருவெறும்பூர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில், திருச்சி குடைவரைக் கோயில்கள் |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a திருச்சி |
| 938 |
: |
_ _ |a திருச்சி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருச்சி நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000205 |
| barcode |
: |
TVA_TEM_000205 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000205/TVA_TEM_000205_திருக்கரம்பனூர்_புருடோத்தமப்பெருமாள்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v021.mp4
TVA_TEM_000205/TVA_TEM_000205_திருக்கரம்பனூர்_புருடோத்தமப்பெருமாள்-கோயில்-0001.jpg
|